என்னை கொண்டாட பிறந்தவளே! (Tamil Edition)

Add your review

 229.00

 229.00

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare


Price: ₹229.00
(as of Mar 03, 2024 23:45:11 UTC – Details)

அவன் அருகில் நடந்து வரவும், தண்டவாளத்தை ரயில் உரசும்போது ஏற்படும் தடக் தடக்கென்ற சத்தம் போன்று, அவளது இதயம் படபடத்தது. அதனால் திரும்பி நின்று கொண்டாள் சுப்ரியா.
அவள் திரும்பி நின்றதை யோசனையாக ஒரு கணம் மனதிற்குள் எண்ணிவிட்டு, “ம்கூம்” தான் வந்து விட்டதாகக் குரல் கொடுத்தான் சந்தோஷ்.
அவளோ, அவனுக்கு முதுகு காட்டி குனிந்த தலையுடன் தயக்கத்துடன் நின்றிருந்தாள்.
‘என்ன இவ திரும்பி நின்னுக்கிட்டா ஏன்? என்னைப் பார்க்க பிடிக்கலையா? அவ்ளோ கேவலமாவா இருக்கேன்?’ என, அவள் திரும்பி நின்று கொண்டதை வைத்து, அவனே தனக்குள் அனுமானித்துக் கொண்டான்.
சுப்ரியாவோ, தான் வந்த ஸ்கூட்டியின் கைப்பிடியை இறுக்கிப் பிடித்த படி அவனைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டே திரும்பாமல் இருந்தாள்.
“எப்ப பார்த்தாலும் என்னைப் பார்த்து முறைச்சுகிட்டே இருப்ப, இப்ப அந்த முகத்தைக் கூடப் பார்க்க உனக்குப் பிடிக்கலையா? திரும்பி நின்னுக்கிட்ட?” தயங்கி தயங்கி சந்தோஷ் சொன்னதும், பட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவளது அழகு முகத்தையும் அவளது காந்த கண்களையும் கண்டதும், அவன் மனதிற்குள் மின்சாரம் பாய்ந்தது.
‘எப்பவும் தூரத்திலே நின்னு, தூரத்துலையே முறைச்சுப் பார்த்திட்டு போயிடுவா? இப்ப திடீர்னு இப்படி பக்கத்துல வந்து சாக் கொடுக்கிறா?’ தனக்குள்ளே யோசித்தவன், “என்ன விஷயம்?” என்று அவளிடம் பட்டென்று கேட்டான்.
ஆண் மகன் தன்னை சீக்கிரம் சமன் செய்து கொண்டான். ஆனால், சுப்ரியாவால் அப்படி முடியவில்லை. தயங்கிய படி கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள்.
“வீட்ல போர் அடிக்குதுன்னு முறைச்சுப் பார்த்திட்டு போகலான்னு வந்தியா?”
இல்லை என்பதாய் உடனே தலை அசைத்தாள்.
“அப்புறம்???”
“இ… இல்ல… நீங்க வீட்டுக்கு வரலையா?”
‘மரியாதையா பேசறா?’ என்று ஆச்சரியமாக மனதிற்குள் எண்ணியவன், “வீ…வீட்டுக்கு வந்து என்ன பண்ண போறேன்? இங்க இருந்தாவது பசங்க கூட அப்படியே ஜாலியா இருந்துட்டு, ஆமா என்ன அதிசயமா என்னை பார்க்க வந்திருக்கா?”
“அ… அது அ….அம்மா”
என்ன பேசுவதென்று தெரியாது தவித்தாள். ‘சொதப்புற ப்ரியா’ என்று தன்னை தானே மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.
“ஓ… உங்க அம்மா என்னை வீட்டுக்கு வர சொன்னாங்களா? அவங்க ஒருத்தவங்கதான் என்மேல ப்ரியமா இருக்காங்க. அவங்க சொல்லி தான் வந்தியா?” எனக் கேட்டான்.
“ம்ம்ம்…” என்றவள் பின்னர் மறுப்பாக… “இல்ல நானாத்தான்…”
‘உன்னை சின்ன வயசுல இருந்தே சின்சியரா நான் லவ் பண்னிட்டு இருக்கேன். இதுல எங்க அம்மா உன்மேல பிரியமா இருக்காங்கன்னு கேட்டுட்டியே???’ என்று மனதிற்குள் எண்ணிவிட்டு, “நீ… நீங்க எப்படி இருக்கிங்க?”
“பார்க்கிறீல எப்படி இருக்கேன்???” தலையை கோதியபடி கேட்டான்.
‘நீ என்னடா கஜினி சூர்யா மாதிரி செம்மையா தான் இருக்க, ஆனா ஏதோ உன்கிட்ட குறையுற மாதிரி தெரியுது? என மனதிற்குள் நினைத்தவள், ‘வெயிட் குறைஞ்சிட்டான்’ என்று கண்டுப்பிடித்தாள்.
அவன் தன்னையே ஆராய்ச்சியாய் பார்க்கவும், “என்ன பண்றதா ப்ளான், நெக்ஸ்ட் ஸ்டடிஸ் கன்டினியூ பண்ண போறிங்களா? இல்ல வொர்க் பார்க்க போறீங்களா?”
“வெட்டியா ஏதோ அப்பப்ப இங்க கிடைக்கிற வேலையை பார்த்திட்டு இருக்கேன்” என்றான்.
“ஓகே”
இத்தனை வருடம் பேசாமல், இன்று புதிதாய் பேசுவதால் ஏற்படும் சந்தோஷமா அல்லது அவனின் அருகாமையால் தோன்றும் வெட்கமா என்று அறியாது, அவள் மனதிற்குள் பெரிய கலவரம் ஓடிக் கொண்டிருந்தது. அடிக்கடி நெற்றியில் வழியும் வியர்வை துளிகளை துடைத்து கொண்டாள்.
அவளைக் கவனித்து கொண்டிருந்தவன், “என்ன வந்ததுல இருந்து ஏதோ டென்ஷனாவே இருக்க? எதாவது ப்ராளமா? எதுனாலும் சொல்லு?”
“அது ஒண்ணுமில்ல, நான் கிளம்புறேன்”
பட்டென்று ஸ்கூட்டியில் கிளம்பியவள், அவனை திரும்ப திரும்பி பார்த்த படி மறைந்தாள் சுப்ரியா.
அவள் எதற்காக வந்தாள்? என்ன விஷயமாக இருக்கும்? என நினைத்து பார்த்தவனுக்கு விடை கிடைக்கவில்லை. யோசிப்பதை தவிர்த்துவிட்டு மீன் பிடிக்க சென்றான் சந்தோஷ்.

முழுக்க முழுக்க காதல் கதை. நாயகனை துரத்தி துரத்தி காதல் செய்யும் நாயகி, ஒரு கட்டத்தில் அவளிடம் தன் மனதை பறி கொடுக்கிறான் நாயகன். அவளின் அறிவுரையின்படி, எப்படி வாழ்க்கையில் ஜெயித்து காட்டுகிறான் என்பதை நகைசுவை கலந்து எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
நன்றி
சாய்லஷ்மி.

ASIN ‏ : ‎ B0CNW7SJM7
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1572 KB
Simultaneous device usage ‏ : ‎ Unlimited
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 270 pages

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “என்னை கொண்டாட பிறந்தவளே! (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *

என்னை கொண்டாட பிறந்தவளே! (Tamil Edition)
என்னை கொண்டாட பிறந்தவளே! (Tamil Edition)

 229.00

offerlooter.com
Logo
Compare items
  • Total (0)
Compare
0