Price: ₹448.00
(as of Mar 17, 2024 17:25:46 UTC – Details)
எதிரெதிர் வீட்டில் இருக்கும் நாயகன், நாயகி!
அந்நாயகனே தன் கல்லூரி பேராசிரியராக வர, அவன் மீது காதல் கொள்ளும் நாயகி!
நாயகியின் காதலை ஏற்றுக் கொண்டானா நாயகன்?
அவள் மீது அவனுக்கும் நேசம் வந்த பிறகும் தன் நேசத்தை மறைக்கின்றான், ஏன்?
கதையிலிருந்து…
“ஏய், ஆள் செம ஹேண்ட்சம்யா!” என்று பானு அவள் காதில் முணுமுணுத்தாள்.
“ஆள் தான் ஹேண்ட்சம். வாயை திறந்தால் சுடுதண்ணி தான் தெறிக்கும்…” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் நயனிகா.
“ம்ம்… என்னடி சொல்ற?” என்று அவள் சொன்னது புரியாமல் பானு கேட்க,
அப்போது சரியாகக் கதிர்நிலவனின் பார்வை இவர்களின் புறம் திரும்பக் கப்சிப்பென்று ஆகிப் போயினர்.
எதிர்வீட்டுப் பெண் அந்த வரிசையில் அமர்ந்திருப்பதைப் பார்த்த கதிர்நிலவன் அவளை அறியாதவன் போல் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டான்.
“குட்மார்னிங் ஸ்டுடெண்ட்ஸ்… என் பெயரை துர்கா மேடம் சொல்லிட்டாங்க. உங்க பெயர் எல்லாம் எனக்குத் தெரியாது…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாணவர்கள் வரிசையிலிருந்து ஒரு மாணவன் எழுந்து தன் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளப் போக, அவனைக் கை நீட்டி தடுத்து அமர சொன்னான்.
“உங்க எல்லாரின் பெயரையும் தெரிந்து கொள்ள எனக்கும் ஆர்வம் இருக்கு ஸ்டுடெண்ட்ஸ். ஆனா பெயர் கேட்டுட்டு இருந்தால் முதல் நாள் வகுப்புத் தடைப்பட்டுப் போகும். முதல் நாளே பாடம் நடத்தாமல் போக எனக்கு விருப்பமில்லை. அதனால் நான் இப்ப கிளாஸ் ஆரம்பிக்கிறேன். போகப் போக உங்க பெயரை எல்லாம் தெரிஞ்சிக்கிறேன்…” என்றான்.
“ஓகே சார்…” என்று மாணவ, மாணவிகள் சொல்ல, தன் கையில் இருந்த கணித புத்தகத்தை மேஜை மீது வைத்து விட்டு சுவர் பலகை பக்கம் திரும்பினான்.
அவனின் வலது கை அவன் கால்சட்டை பைக்குள் இருக்க, இடது கையில் சாக்பீஸை எடுத்துப் பலகையில் எழுத ஆரம்பித்தான்.
‘ஓ! சாருக்கு இடது கை பழக்கம் போல…’ என்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்த நயனிகா நினைத்துக் கொண்டாள்.
வலது கையைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு இடது கையில் எழுதிக் கொண்டே அவ்வப்போது மாணவர்களின் புறம் திரும்பி அவர்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டே பாடத்தை நடத்திக் கொண்டிருந்தான் கதிர்நிலவன்.
There are no reviews yet.