Price: ₹200.00
(as of Mar 10, 2024 22:41:38 UTC – Details)
நாயகன்: விதுரன்
நாயகி: மதுரியா
பெரியோர்களால் நாயாகியுடன் நிச்சயிக்கப் பட்டத் திருமணத்தை, நாயகி தனக்கு ஏற்ற துணையில்லை என்று கூறி,நிராகரித்துத் திருமணத்தை நிறுத்துகிறான் நாயகன். அதனால் மனமுடைந்த நாயகி எல்லாரையும் விட்டு சிறிதுக் காலம் விலகிச் செல்கிறாள். அவள் மீண்டும் குடும்பத்தைக் காண வரும் போது, நாயகன் பல தோல்விகளையும்,ஏமாற்றங்களையும் சந்தித்து எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான். அதனைக் கண்ட நாயகியின் நிலை என்ன?நாயகனை சந்தித்து மீட்பாளா? நாயகனை ஏமாற்றியது யார் என்பதை கதையினில் படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
கதையிலிருந்து சில துளிகள்…
. சரி, சொல்றேன்.. பரத்பா… இந்த கல்யாணம் நடக்க போறதில்லே… இன்னொரு ரெண்டு மூணு நாள்லே நிக்கப் போகுது-னு கண்ணுலே தண்ணி வழிய சொன்னா மதுரியா. ரியா… என்னடீ உளர்றே… அப்பாவுக்கு தெரிஞ்சா… அவ்வளோதான்.. உன்னை கொன்னுடுவார் ரியா-னு பதறினா ஆனந்தியா. தியா… கொயட்-னு அழுத்தமான குரல்லே பரத் சொல்லவும் அமைதியானா ஆனந்தியா. அவன் சீட்லே இருந்து மதுரியா பக்கம் திரும்பி, நடுங்கற அவ கைமேலே கையை வைச்சு, அழுத்திப்பிடிச்சான். நடுங்கற அவ கையும் உதர்ற அவ உடலும் கண்ணுலே வழியற தண்ணியும் வேறே கதை சொல்லிச்சு. அதோட அர்த்தம் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனா விளக்கம் வேண்டி இருந்துச்சு.
*********************************************************
பார்க் ஹோட்டல்லே நுழைஞ்சதும் இவங்க ரெண்டு பேர் உள்ளே வர்றதை பார்த்து அதிர்ந்தாங்க பார்ட்டி ஹால் வாசல்லே இருந்த ரெண்டுப் பேர். அது வேறே யாரும் இல்லே. அசோக்கும் விக்கியும். இவ… மதுரியா இல்லே… இவ இவன் கூட என்ன பண்றா-னு கேட்டான் விக்கி. ம்ம்ம்… இந்த சனியனோட புது கேர்ள் ஃப்ரெண்ட்-னு சொன்னான் அசோக். ஏது… கேர்ள் ஃப்ரெண்டா-னு அதிர்ந்தான் விக்கி. அதுக்குள்ளே ரெண்டுப் பேரும் பக்கத்துலே வரவும், முகத்தை மாத்தி ஹலோ சொன்னாங்க. ஹாய்… ஹவ் ஆர் யூ-னு சகஜமா பேசினான் அசோக். என்னை ஞாபகம் இருக்கா-னு இழுத்தான் விக்கி. ம்ம்ம்.. விதுரனோட ஃப்ரெண்ட் தானே-னு ஸ்டிரெயிட்டா கேட்டா மதுரியா. மறைப்பா, மழுப்புவான்னு எதிர்பார்த்த விக்கிக்கு அது ரெண்டாவது அதிர்ச்சி. யா… நல்லா இருக்கீங்களா-னு அதை மறைச்சு சகஜமா கேட்டான் விக்கி. குட்… தேங்க்ஸ்… தீப்… நீங்க போயிட்டு வாங்க. நான் லான் ஏரியாலே வெயிட் பண்றேன்-னு சொன்னா. அவங்களும் டீசண்டா விடைலக் குடுத்தாங்க. கொஞ்ச நேரம் ப்ரதீப் நின்னு பேசிட்டு இருந்தான்.
**************************************************
அங்கே ப்ரதீப்பை பார்த்ததும் கோபாவேசமா அவன் கிட்டப் போனான். உன் மனசுலே-னு ஏக வசனத்திலே ஆரம்பிச்சப்போ தான் அவன் பக்கத்திலே பரத் இருந்ததை கவனிச்சான். பரத்… நீங்க… ப்ரதீப்பை உங்களுக்கு…..னு கோர்வை இல்லாம பேச தடுமாறினான். ம்ம்ம்… கொஞ்சம் உட்காருங்க விதுரன்-னு அலட்டிக்காம சொன்னான் பரத். உங்க ஃபேமிலிக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியும்-னு எதிர்பார்க்கலே அப்படீ-னு சொன்னான் விதுரன். எதிர்பார்த்திருக்கணும்… ஏன் எதிர்பார்க்கலே? ஏன்னா எப்போவும் உங்களைப் பத்தியே யோசிச்சு பழக்கம்.. அதனால தான்-னு அயர்ச்சியா சொன்னான் பரத். மூணு மாசமா நீங்களே கதி-னு இருக்காளே ரியா.. அவ வாழ்க்கையை பத்தி, அவளைப் பத்தி யோசிச்சீங்களா-னு பரத் கேட்டவும், எதை வைச்சு யோசிக்கவே இல்லை-னு சொல்றீங்கனு பதில் கேள்வி கேட்டான் விதுரன். யோசிச்சிருந்தா அவளைப் பத்தி ஊரே தப்பா பேசறது உங்களுக்கு கேட்டிருக்குமே. உங்க செக்யூரிடியிலே இருந்து உங்க ஆபீஸ் ஸ்டாஃப் வரைக்கும் தாறு மாறா பேசறாங்க… இவங்களே இப்படீன்னா வெளியே எப்படியோ. சொல்லுங்க விதுரன். இதெல்லாம் தெரியுமா தெரியாதா-னு கோபமாவே கேட்டான் பரத். இப்படி இருக்கறப்போ அவளைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்க தானே அவளை கல்யாணம் செஞ்சுக்க முடியும். வேறே வழியிருக்கா? அது விஷயமா ப்ரதீப் கிட்ட பேச வந்தப்போ தான் நீங்க வர்றதா சொல்லவும், உங்ககிட்டேயும் பேச நினைச்சேன்-னு பரத் சொல்லவும் மேலும் அதிர்ச்சி விதுரனுக்கு.
ASIN : B0CW1S63ZZ
Language : Tamil
File size : 1133 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 439 pages
There are no reviews yet.